Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 22 அக்டோபர் 2026 | 5 ஐப்பசி பராபவ வருடம்

தொடர் கனமழை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள இந்த வானிலை மாற்றத்தால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (22.10.2026) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர். மேலும், கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் வெளியிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு