Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

தமிழகம் முழுவதும் லஞ்சம் வாங்கிய 18 அரசு அதிகாரிகள் கைது: ரூ.1.59 கோடி பறிமுதல்

தமிழகம் முழுவதும் லஞ்சம் வாங்கிய 18 அரசு அதிகாரிகள் கைது: ரூ.1.59 கோடி பறிமுதல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளில், லஞ்சம் பெற்றதாக 18 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக எழும் புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் 18 பேர் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வணிக ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள், கூடுதல் மாவட்ட தீயணைப்பு அதிகாரி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் அடங்குவர்.

Advertisement
கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது, கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் ஜி-பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பான தொகைகள் என மொத்தம் ரூ.1 கோடியே 59 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்குகளில் 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு