Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

முன்பதிவிலேயே அசத்தும் ‘ராமாயணா’ திரைப்படம்... இதுவரை ரூ.46 கோடிக்கு மேல் வசூல்

முன்பதிவிலேயே அசத்தும் ‘ராமாயணா’ திரைப்படம்... இதுவரை ரூ.46 கோடிக்கு மேல் வசூல்

ரன்பீர் கபூர், யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே வசூலில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதன் டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.46.41 கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் கதாபாத்திரத்தில் யாஷ் தோன்றுகிறார். அனுமனாக சன்னி தியோல் நடித்துள்ளார். இவர்களுடன் ரவி துபே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். இப்படத்தின் இசைப் பணிகளை ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement
இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதுடன், இந்திய முன்பதிவு வசூல் ரூ.46.41 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘ராமாயணா’ திரைப்படம் வரும் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முந்தைய நாளான நவம்பர் 4-ம் தேதி சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட உள்ளன. வெளியீட்டுக்கு முன்பே முன்பதிவில் கிடைத்துள்ள இந்த வரவேற்பு படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இறுதிக்கட்ட முன்பதிவு மற்றும் முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்பது படம் வெளியாகும் சமயத்தில்தான் தெரியவரும். பிரம்மாண்டமான காட்சிகள், பிரபல நடிகர்களின் கூட்டணி என பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘ராமாயணா’, திரையரங்குகளில் புதிய வசூல் சாதனையை நிகழ்த்துமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு