Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? – சுப்மன் கில் பதில்

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? – சுப்மன் கில் பதில்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இதற்கிடையே, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இணைவது குறித்து கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: "ஹர்திக் பாண்ட்யா ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர். போட்டியின் எந்தச் சூழலிலும் தனது திறமையை வெளிப்படுத்தக்கூடியவர். அவரிடம் இருக்கும் அபாரமான திறமை உலகில் மிகச் சில வீரர்களிடமே காணப்படுகிறது. அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே இந்திய அணிக்கு மிகுந்த பலம் சேர்க்கின்றன.

Advertisement
பாண்ட்யா மீண்டும் அணியில் இடம்பிடித்தால், 7 மற்றும் 8-வது பேட்டிங் வரிசைகள் வலுப்பெறும். ஐபிஎல் தொடருக்குப் பிறகு அடுத்தடுத்து ஏற்பட்ட காயங்களால் அவரால் இந்திய அணியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியா ஏ அணிக்காக அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கணுக்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அந்த வாய்ப்பும் தடைபட்டது. அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். விரைவில் அவர் முழு உடற்தகுதியை எட்டுவார் என நம்புகிறோம். அதன்பிறகு சில உள்ளூர் போட்டிகளில் விளையாடி, மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார்" என்று சுப்மன் கில் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு