Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

ஈரோட்டில் முதல்-அமைச்சர் விஜய் ரோடுஷோ: மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

ஈரோட்டில் முதல்-அமைச்சர் விஜய் ரோடுஷோ: மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

தமிழகத்தில் மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் விஜய், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், ரோடுஷோ மூலம் பொதுமக்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் வழங்கும் அரசு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. பெருந்துறை நான்கு வழிச்சாலையில் உள்ள காஞ்சிக்கோவில் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மகாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று, மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு வங்கிக் கடன்களையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். மேலும், பெண்கள் குழுவினர் அமைத்துள்ள கண்காட்சி அரங்குகளையும் அவர் பார்வையிடுகிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின்னர், காரில் ஈரோடு மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். விஜயமங்கலத்தை கடந்து சிப்காட் பகுதி வழியாகச் சென்றபோது, முதல்-அமைச்சர் விஜய் ரோடுஷோ மேற்கொண்டார்.

Advertisement
அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்களும் த.வெ.க. தொண்டர்களும் மலர்களைத் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய்யைக் கண்ட பெண்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அவர்களை நோக்கி கையசைத்தபடி முதல்-அமைச்சர் விஜய் தனது பயணத்தைத் தொடர்ந்தார். விஜயமங்கலம் சுங்கச்சாவடியிலும் தொண்டர்களும் பொதுமக்களும் மலர்களைத் தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் அவரை வரவேற்றனர். இதற்கிடையே, பெருந்துறை செல்லும் வழியில் பெருமாநல்லூரில் அத்திக்கடவு-அவினாசி திட்டப் போராட்டக் குழுவினர் முதல்-அமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பேசினர். அப்போது விவசாயிகள் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும், திட்டத்தில் 1,400 குட்டைகள் விடுபட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், 1,400 குளம், குட்டைகள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1,200 அடிக்குக் கீழ் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு