தமிழகத்தின் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.இதன் தாக்கத்தால், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வானிலை மாற்றங்களை கவனித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.