Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

தமிழக வீராங்கனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

தமிழக வீராங்கனைக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகோட்டப் போட்டியின் பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமணனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நேத்ரா குமணன் தனது திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த அவருக்கு தனது பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், நேத்ராவின் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். நேத்ரா குமணனின் வெற்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும், அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று புதிய சாதனைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு