காந்தியின் அறவழியில் வெற்றிப் பயணத்தை தொடர்வோம்: முதல்-அமைச்சர் விஜய்
மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அகிம்சையை மிகப்பெரிய ஆயுதமாகக் கொண்டு உலகையே வியக்கச் செய்து, இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், அவரது தேசப்பற்று மற்றும் தியாகம் நிறைந்த வாழ்க்கையைப் போற்றுவதாக தெரிவித்துள்ளார். எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு, உலகம் முழுவதும் அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்த்தவர் காந்தி என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.