Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

வறட்சியின் தாக்கம்: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

வறட்சியின் தாக்கம்: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வழக்கமாக சுமார் 15,000 தக்காளி பெட்டிகள் வரத்து இருக்கும் நிலையில், தற்போது வெறும் 3,000 பெட்டிகள் மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைந்துள்ளதால் வியாபாரிகள் தக்காளியை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். முன்பு முதல் ரக தக்காளி பெட்டி ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், இரண்டாம் ரக தக்காளி பெட்டி ரூ.250 முதல் ரூ.300 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Advertisement
தற்போது முதல் ரக தக்காளி பெட்டி ரூ.700-க்கும், இரண்டாம் ரக தக்காளி பெட்டி ரூ.650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. வறட்சியின் தாக்கத்தால் தக்காளி வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு