Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற நேத்ரா குமணன்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற நேத்ரா குமணன்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ‘Sailing Women’s Dinghy’ பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமணனுக்கு, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது சாதனைக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் ரூ.30 லட்சம் ஊக்கத் தொகையை பெறும் தகுதியையும் நேத்ரா குமணன் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
தொடர்ந்து தனது சாதனைகள் மூலம் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதுடன், இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். விளையாட்டில் தமிழக இளைஞர்கள் காட்டும் ஆர்வத்துக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு