Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

மதுராந்தகத்தில் இன்று 45 கி.மீ. பிரம்மாண்ட ரோடு ஷோ: முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்

மதுராந்தகத்தில் இன்று 45 கி.மீ. பிரம்மாண்ட ரோடு ஷோ: முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டும் வகையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) சுமார் 45 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொள்கிறார். பிரசாரத்தின் இடையே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் சென்று அவர் சிறப்பு வழிபாடும் நடத்துகிறார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக கடந்த 25-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தாராபுரம் தொகுதியில் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்தும் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் இன்று இரண்டாவது முறையாக விஜய் பிரசாரம் செய்கிறார். இம்முறை பொதுக்கூட்ட மேடை அமைத்து பிரசாரம் செய்வதற்கு பதிலாக, ரோடு ஷோ மூலம் பொதுமக்களையும் வாக்காளர்களையும் நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். முதலில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மக்களை நேரில் சந்திக்கும் வகையில் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பிரசாரப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு தொடங்கும் ரோடு ஷோ, இரவு 9 மணி வரை சுமார் 5 மணி நேரம் நடைபெறுகிறது.

Advertisement
ரோடு ஷோ செல்லும் வழித்தடம் செங்கல்பட்டு எல்லையான மாமண்டூரில் இருந்து தொடங்கும் விஜய்யின் பிரசாரப் பயணம், படாளம், கருங்குழி அய்யனார் கோவில், மதுராந்தகம் நகரம், பெரும்பாக்கம், மேல்மருவத்தூர் வழியாகச் சென்று அச்சரப்பாக்கத்தில் நிறைவடைகிறது. இந்தப் பயணத்தின்போது சுமார் 39 முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை நேரில் சந்தித்து அவர் ஆதரவு திரட்டுகிறார். மேல்மருவத்தூரில் சிறப்பு வழிபாடு ரோடு ஷோவின் ஒரு பகுதியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் செல்லும் முதல்-அமைச்சர் விஜய், அங்கு அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ள உள்ளார். விஜய்யின் வருகை மற்றும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் ரோடு ஷோவை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், வாகன நெரிசலை கட்டுப்படுத்த மாற்றுப் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு