Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்த துண்டுச் சீட்டு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று 192 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 198 பேருடன் புறப்பட்டு வந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் கழிவறையில் ஒரு காகிதம் கிடந்துள்ளது. அதில், 'BOOM - 1.50 PM' என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த விமானப் பணியாளர்கள், விமானத்தில் வெடிகுண்டு இருக்கக்கூடும் என சந்தேகமடைந்தனர். இதையடுத்து, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் இருந்த 192 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் பயணிகளின் உடைமைகள் மற்றும் விமானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், இந்த ஆய்வில் வெடிகுண்டோ அல்லது வேறு சந்தேகத்திற்குரிய பொருட்களோ கண்டறியப்படவில்லை. இதனால், விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையே, விமானத்தின் கழிவறையில் மிரட்டல் வாசகம் எழுதப்பட்ட காகிதத்தை வைத்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு