Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கருங்கடல் பகுதியில் பதற்றம்: உக்ரைன் துறைமுகத்தில் 13 இந்திய மாலுமிகள் சிக்கல்

கருங்கடல் பகுதியில் பதற்றம்: உக்ரைன் துறைமுகத்தில் 13 இந்திய மாலுமிகள் சிக்கல்
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கருங்கடல் பகுதியில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் வணிக கப்பல்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில், பலாவ் நாட்டின் கொடியுடன் இயக்கப்படும் எம்.வி. அமிர்-1 என்ற சரக்கு கப்பல், உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான செர்னோமோர்ஸ்க் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 15 பேர் பணியில் உள்ளனர்.துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவதால், கப்பலை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்திய மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ள வீடியோவில், கப்பலுக்கு அருகில் புகை சூழ்ந்த காட்சிகளும், தாக்குதல்களின் சத்தங்களும் பதிவாகியுள்ளன.
Advertisement
இதனால் கப்பலில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது.இதையடுத்து, இந்திய மாலுமிகள் சங்கம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உக்ரைன் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து 13 இந்திய மாலுமிகளையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.முன்னதாக, உக்ரைனின் ஒடேசா துறைமுகம் அருகே நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது மேலும் 13 இந்தியர்கள் போர் பதற்றம் நிறைந்த பகுதியில் சிக்கியிருப்பது புதிய கவலையை உருவாக்கியுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு