Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கயானா

கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கயானா

14-வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் என 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா அணி 19.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Advertisement
அந்த அணியில் தொடக்க வீரர் ஹெண்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். கயானா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது நபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதையடுத்து 118 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணி 14.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜமைக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கயானா வெற்றி பெற்றது.கயானா அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஹோப், 56 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு