கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கயானா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கயானா

கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கயானா

14-வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் என 7 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா அணி 19.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் தொடக்க வீரர் ஹெண்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். கயானா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது நபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதையடுத்து 118 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கயானா அணி 14.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜமைக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கயானா வெற்றி பெற்றது.கயானா அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஹோப், 56 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.