கேரளாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக மேலும் வலுப்பெற்றுள்ளது. இதன் தாக்கமாக எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது.தொடர்ச்சியான மழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும், 11 பேர் காயமடைந்துள்ளதுடன், 4 பேரை காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.