Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

கடைசி ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா நாளை மோதல்

கடைசி ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா நாளை மோதல்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 ஒருநாள் ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் அந்த அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

Advertisement
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும். இதனால் கடைசி ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு