தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 ஒருநாள் ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் அந்த அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கும் நிலையில், ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும். இதனால் கடைசி ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.