Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 03 நவம்பர் 2026 | 17 ஐப்பசி பராபவ வருடம்

கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக்கடலில் உருவான 'முரசு' புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் இன்று நெல்லூர் - நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement
புயல் கரையைக் கடக்கும்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் கடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு