கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக்கடலில் உருவான 'முரசு' புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், நேற்று காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. இந்தப் புயல் இன்று நெல்லூர் - நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் கடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.