Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

‘என்னை கைது செய்யவில்லை, கடத்தினார்கள்’ - யூடியூபர் துருவ் ரத்தீ குற்றச்சாட்டு

‘என்னை கைது செய்யவில்லை, கடத்தினார்கள்’ - யூடியூபர் துருவ் ரத்தீ குற்றச்சாட்டு

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது, தன்னை போலீசார் கைது செய்யவில்லை; கடத்திச் சென்றதாகப் பிரபல யூடியூபர் துருவ் ரத்தீ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் துருவ் ரத்தீயும் ஒருவர். இந்த நடவடிக்கை குறித்து அவர் தனது அனுபவங்களை வீடியோவாகப் பகிர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய துருவ் ரத்தீ, “நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, காலை 7 மணியளவில் சாதாரண உடையில் வந்த சுமார் 20 பேர் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

Advertisement
இது கைது நடவடிக்கை அல்ல; என்னைக் கடத்திச் சென்றார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 23 மணி நேரம் தனது வழக்கறிஞரைச் சந்திக்கவும், செல்போனைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். தன்னை ஒரு வாகனத்தில் வைத்தே பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் துருவ் ரத்தீ குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், துருவ் ரத்தீ வெளியிட்டுள்ள இந்த வீடியோ கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு