Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 11 அக்டோபர் 2026 | 25 புரட்டாசி பராபவ வருடம்

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று முன்தினம், ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.71 ஆகக் குறைந்தது. இதன் மூலம், கடந்த மே மாதம் பதிவான வரலாறு காணாத வீழ்ச்சியான 96.96 என்ற நிலையை ரூபாய் மதிப்பு மீண்டும் நெருங்கியுள்ளது. இதற்கிடையே, ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பும் கடந்த சில வாரங்களில் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி, இந்தக் கையிருப்பு 734 பில்லியன் டாலராக இருந்தது. ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, அதிக அளவில் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்காகத் தனிப்பட்ட பரிவர்த்தனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
இந்த ஏற்பாட்டின்படி, ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்படும் வங்கிகள் வாயிலாக, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்க டாலர்கள் விற்பனை செய்யப்படும். இதனால், பொதுச் சந்தையில் இருந்து அந்த நிறுவனங்கள் டாலர்களை வாங்க வேண்டிய தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் இந்த வசதி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே, கடந்த 2013-ஆம் ஆண்டு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தபோது, எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவையை அந்நியச் செலாவணி சந்தையிலிருந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், 2 மில்லியன் டாலருக்கு மேல் வாங்கும் வங்கிகள், அதற்காக 20 சதவீதத் தொகையை ஒதுக்கீடாக வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கூடுதல் அறிவிப்புகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு