Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 12 அக்டோபர் 2026 | 26 புரட்டாசி பராபவ வருடம்

2030-க்குள் எச்ஐவி இல்லாத நிலையை எட்ட ஒன்றிணைந்து செயல்படுவோம் - அமைச்சர் அருண்ராஜ்

2030-க்குள் எச்ஐவி இல்லாத நிலையை எட்ட ஒன்றிணைந்து செயல்படுவோம் - அமைச்சர் அருண்ராஜ்

எச்ஐவி மற்றும் பால்வினைத் தொற்றுகள் குறித்த தேசிய விழிப்புணர்வு பிரசாரத்தின் தமிழ்நாடு மாநில அளவிலான நிறைவு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12 வரை எச்ஐவி மற்றும் பால்வினைத் தொற்றுகள் தொடர்பான தேசிய விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக, 2010ஆம் ஆண்டில் 0.4 சதவீதமாக இருந்த எச்ஐவி தொற்று விகிதம், 2023ஆம் ஆண்டில் 0.19 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், எச்ஐவி தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவியை முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
இதன்படி, பெற்றோர் இருவரையும் இழந்து எச்ஐவி தொற்றுடன் வாழும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.3,000-ம், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.2,000-ம், பெற்றோருடன் வாழும் எச்ஐவி தொற்றுள்ள குழந்தைகளுக்கு ரூ.1,500-ம் நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும். அதேபோல், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த நிலையில், தங்களுக்கு அந்தத் தொற்று இல்லாமல் வாழும் குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகையும் ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 2030ஆம் ஆண்டுக்குள் எச்ஐவி/எய்ட்ஸ் இல்லாத நிலையை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு