Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 11 அக்டோபர் 2026 | 25 புரட்டாசி பராபவ வருடம்

டெல்லி தடையை மீறிய போராட்டம்; அபிஜீத் திப்கே உள்பட 3 பேர் விடுவிப்பு

டெல்லி தடையை மீறிய போராட்டம்; அபிஜீத் திப்கே உள்பட 3 பேர் விடுவிப்பு

டெல்லியில் போராட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட அபிஜீத் திப்கே உள்ளிட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையின்போது பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வாக்காளர் பெயர் நீக்க நடவடிக்கையில் அரசியல் சார்புடன் செயல்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தியன்று ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதே கோரிக்கையை முன்வைத்து அண்மையில் மும்பை சிவாஜி பூங்காவிலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, 3-ம் தேதியும் அகில இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

Advertisement
இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரித்திருந்தனர். போராட்டத்தின்போது வன்முறை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் என சுமார் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும், தடையை மீறி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர். மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த அபிஜீத் திப்கேவையும் விமானத்திலேயே போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அபிஜீத் திப்கே, அசுதோஷ் ரன்கா, சவுரவ் தாஸ் ஆகிய மூவரும் இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 24 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், டெல்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் வருகைக்காகக் காத்திருந்தனர். மாஜிஸ்திரேட் வந்ததும், மூவரையும் விடுவிக்க வேண்டும் என அவர்களது கட்சி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், அபிஜீத் திப்கே உள்ளிட்ட மூவரையும் விடுவிக்க உத்தரவிட்டார். இதேபோல், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த யூடியூபர் துருவ் ரதீயும் நேற்று இரவு விடுவிக்கப்பட்டார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு