Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

’எனக்கு இறப்பு சான்று வேண்டும்..’ கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

’எனக்கு இறப்பு சான்று வேண்டும்..’ கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் கே.ஜி. ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (47). விவசாயக் கூலியான இவர், உயிருடன் இருக்கும் தனக்கு இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதுகுறித்து காந்தி கூறியதாவது: “கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எனது தந்தை ஆனந்தன் உயிரிழந்தார். அதன்போது, ரேஷன் அட்டையில் இருந்த எனது பெயரும் அவரது பெயருடன் சேர்த்து அதிகாரிகளால் நீக்கப்பட்டது. இதனால் எனக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. கடந்த 18 மாதங்களாக ரேஷன் அட்டையில் எனது பெயரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளேன்.

Advertisement
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டாலும் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். தற்போது எனது மகன்களான பூவரசன் மற்றும் பேரரசன் ஆகிய இருவரும் இந்திய ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது, ரேஷன் அட்டையில் தந்தையின் பெயர் இல்லாததால் வேலைவாய்ப்பைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரேஷன் அட்டையில் எனது பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும். இல்லையெனில், உயிருடன் இருக்கும் எனக்கு இறப்பு சான்றிதழையாவது வழங்க வேண்டும்” என்று காந்தி தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு