’எனக்கு இறப்பு சான்று வேண்டும்..’ கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

’எனக்கு இறப்பு சான்று வேண்டும்..’ கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

’எனக்கு இறப்பு சான்று வேண்டும்..’ கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் கே.ஜி. ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (47). விவசாயக் கூலியான இவர், உயிருடன் இருக்கும் தனக்கு இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதுகுறித்து காந்தி கூறியதாவது: “கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எனது தந்தை ஆனந்தன் உயிரிழந்தார். அதன்போது, ரேஷன் அட்டையில் இருந்த எனது பெயரும் அவரது பெயருடன் சேர்த்து அதிகாரிகளால் நீக்கப்பட்டது. இதனால் எனக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. கடந்த 18 மாதங்களாக ரேஷன் அட்டையில் எனது பெயரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டாலும் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். தற்போது எனது மகன்களான பூவரசன் மற்றும் பேரரசன் ஆகிய இருவரும் இந்திய ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது, ரேஷன் அட்டையில் தந்தையின் பெயர் இல்லாததால் வேலைவாய்ப்பைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரேஷன் அட்டையில் எனது பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும். இல்லையெனில், உயிருடன் இருக்கும் எனக்கு இறப்பு சான்றிதழையாவது வழங்க வேண்டும்” என்று காந்தி தெரிவித்துள்ளார்.