Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

கமலின் புதிய படத்தின் பதிவை விமர்சித்த இயக்குநர் லெனின் பாரதி

கமலின் புதிய படத்தின் பதிவை விமர்சித்த இயக்குநர் லெனின் பாரதி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் அடுத்த திரைப்படம் தொடர்பான விளம்பரப் பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள பழிவாங்குதல் குறித்த வாசகத்துக்கு இயக்குநர் லெனின் பாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தை இயக்கியவர் லெனின் பாரதி. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. பல்வேறு விருதுகளைப் பெற்ற இப்படம், நியூயார்க் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், கமல்ஹாசனின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் 237-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களை இயக்கிய சு. அருண் குமார் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனுடன், “பழிவாங்குதல் ரத்தத்தால் மட்டுமே தீர்க்கப்படும்” என்ற பொருள்படும் வாசகமும் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.

Advertisement
இந்தக் கருத்து திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கதாநாயகர்களை மையப்படுத்திய திரைப்படங்களின் தாக்கத்தால் இளைஞர்கள் மத்தியில் ஏற்கனவே வன்முறை மனப்பான்மை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில், கமல்ஹாசன் சமூகப் பொறுப்புணர்வின்றி பழிவாங்கலை ரத்தத்துடன் தொடர்புபடுத்தும் வாசகத்தைத் தனது புதிய படத்தின் விளம்பரத்திற்குப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும் கமல்ஹாசன், வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பர வாசகத்தைப் பயன்படுத்துவது சரியா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம், உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவான ‘சித்தா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சு. அருண் குமார் மற்றும் கமல்ஹாசன் இணையும் புதிய படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு