தாராபுரத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தி.மு.க. பிரசாரக் கூட்டத்தில், த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை விமர்சித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். அப்போது, சத்தியபாமாவை குறிப்பிடும் வகையில் பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்தார். மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, த.வெ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சத்தியபாமாவை உருவக்கேலி செய்ததாகக் கூறி, மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
Advertisement
இதனுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி போலீஸ் டி.ஜி.பி.யிடமும் த.வெ.க.வினர் மனு அளித்தனர். இந்நிலையில், சத்தியபாமாவை உருவக்கேலி செய்ததாகக் கூறி, திருச்சியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி த.வெ.க. மகளிர் அணியினர் இந்தப் புகார்களை அளித்துள்ளனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.