Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!

இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!
இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மையப்பகுதி 32.925 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 76.145 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்ததாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, லடாக்கின் லே பகுதியில் இன்று காலை 8.25 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
Advertisement
ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 36.700 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 74.343 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு