இப்படி நடந்துகொண்டதற்கு பரிசு வழங்கி பாராட்டுவதா..? முதல்-அமைச்சர் விஜய்க்கு கி.வீரமணி கேள்வி
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்-அமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ், அப்பகுதியின் பெண் மாவட்ட கலெக்டருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவு நேரத்தில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் வெளியான தகவல்கள் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் வெளியாகி ஐந்து நாட்களுக்கும் மேலாகியும், அரசு தரப்பில் இதுவரை உரிய நடவடிக்கையோ விளக்கமோ அளிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிக்கே இத்தகைய தொல்லைகள் ஏற்படுவது வேதனையானது. த.வெ.க. ஆட்சியில் மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. பாதிக்கப்பட்ட கலெக்டர், இந்த விவகாரம் குறித்து தலைமைச் செயலாளரிடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளதாகவும், அவரது கணவரான மற்றொரு மாவட்ட கலெக்டரும் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், புகார் வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமைச்சர் ஒருவர் கூறுவது பொறுப்பற்ற அணுகுமுறையாகும். நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? ரகசியமாக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அல்லது சமரசப் பேச்சுவார்த்தையுடன் பிரச்சினையை முடிக்க முயற்சி நடக்கிறதா? இதுகுறித்து முதல்-அமைச்சர் விஜய் ஏன் இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை? சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை முதல்-அமைச்சர் அழைத்துக் கண்டித்ததாகவும், கடுமையாக எச்சரித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை. ஆட்சியைத் தக்கவைக்கத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு குறைவாக இருப்பதால், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீதும், பொதுமகர் ஒருவரைத் தாக்கியதாகப் புகாரில் சிக்கியுள்ள சட்டப்பேரவைத் துணைத் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகக் கூறப்படுவது உண்மையா? பதவியில் நீடிப்பதற்காகக் கட்சியினர் செய்யும் தவறுகளை முதல்-அமைச்சர் சகித்துக்கொள்வாரா? எம்.எல்.ஏ.க்களை அழைத்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் பட்டுச் சட்டை, பட்டுவேட்டி வழங்கி, தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்ததாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பரிசுகள் வழங்கிப் பாராட்டுவது என்ன நியாயம்? மக்கள் பணியாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு பொதுவான ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியமில்லையா? ஒரு பெண் ஐ.ஏ.எஸ்.