Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 11 அக்டோபர் 2026 | 25 புரட்டாசி பராபவ வருடம்

3-வது ஒருநாள் போட்டி... இந்தியா ஏ-க்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு!

3-வது ஒருநாள் போட்டி... இந்தியா ஏ-க்கு எதிராக  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு!

இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. முதல் போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்றது.

Advertisement
இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. தொடரை இழந்துள்ள இந்தியா ஏ அணி, கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில், இந்தியா ஏ அணியை மீண்டும் வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்ற ஆஸ்திரேலியா ஏ அணி தீவிரம் காட்டுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு