3-வது ஒருநாள் போட்டி... இந்தியா ஏ-க்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
11 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

3-வது ஒருநாள் போட்டி... இந்தியா ஏ-க்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு!

3-வது ஒருநாள் போட்டி... இந்தியா ஏ-க்கு எதிராக  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு!

இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. முதல் போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. தொடரை இழந்துள்ள இந்தியா ஏ அணி, கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில், இந்தியா ஏ அணியை மீண்டும் வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்ற ஆஸ்திரேலியா ஏ அணி தீவிரம் காட்டுகிறது.