2 தொகுதி இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, சிபிஎம், நாதக கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஆளும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால், இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 39 பேர் மொத்தம் 51 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.