Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

19-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா

19-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 19-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தி.மு.க. தொடங்கப்பட்ட செப்டம்பர் 17-ந்தேதி, கட்சியின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை இணைத்து ஆண்டுதோறும் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா செப்டம்பர் 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய தினம் நடைபெற இருந்த முப்பெரும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. விழாவுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 19-ந்தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு