Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

லண்டன் ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார்

லண்டன் ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார்

லண்டன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆடவர் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார், பராகுவே நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ மார்காண்டனியோவை எதிர்கொண்டார்.

Advertisement
உலகத் தரவரிசையில் 42-வது இடத்தில் இருக்கும் வேலவன், 124-வது இடத்தில் உள்ள பிரான்சிஸ்கோவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வேலவன், 11-5, 11-7, 14-12 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ்கோவை வீழ்த்தினார். இதன்மூலம், லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் வெற்றியைப் பதிவு செய்த வேலவன் செந்தில்குமார், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு