Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 06 நவம்பர் 2026 | 20 ஐப்பசி பராபவ வருடம்

முன்னாள் படைவீரர்கள் விரும்பிய பணியில் சேர புதிய இணையதள வசதி அறிமுகம்

முன்னாள் படைவீரர்கள் விரும்பிய பணியில் சேர புதிய இணையதள வசதி அறிமுகம்

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விருப்பத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளைப் பெற உதவும் வகையில், மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த இணையதள செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சர் சரத்குமார் இன்று (நவம்பர் 6) தொடங்கி வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒப்பந்த அடிப்படையில் மறுவேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் 1986-ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் நிறுவப்பட்டது. இந்தக் கழகத்தின் வாயிலாக இதுவரை 60 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது 2,207 திட்டங்களில் மொத்தம் 9,786 பணியிடங்கள் உள்ளன. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, ரூ.19 லட்சம் செலவில் ஏற்கெனவே உள்ள இணையதளம் மேம்படுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த வலைதள செயலியாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement
இந்தப் புதிய வசதியின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது படை தொடர்பான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும், தனிப்பட்ட விவரங்கள் மற்றும் திறன்களைப் பதிவு செய்து, தங்களது விருப்பத்திற்கேற்ப பணிகளுக்கு விண்ணப்பிக்கவும், இணையவழியில் வேலைவாய்ப்பைப் பெறவும் முடியும். அதேபோல், நிறுவனங்கள் தங்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையப் பக்கத்தின் வாயிலாக, தேவையான பணியாளர்களின் கல்வித் தகுதி, வயது, திறன்கள், பணியிடம், வேலை நேரம் மற்றும் ஊதிய விவரங்களைப் பதிவு செய்யலாம். பணியாளர்களைத் தேர்வு செய்து நியமிப்பதற்கான நடைமுறைகளையும் எளிதாக மேற்கொள்ளும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இணையதள செயலியை மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சர் சரத்குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மா.சௌ. சங்கீதா, பொது மேலாளர் மு. மணிமேகலை மற்றும் கழகத்தின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு