Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக உழவர் அங்காடியில் திடீர் தீ விபத்து; பொருட்கள் சேதம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக உழவர் அங்காடியில் திடீர் தீ விபத்து; பொருட்கள் சேதம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுய உதவிக்குழுவினர் சார்பில் உழவர் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து ஏற்பட்டபோது அங்காடியில் பணியாற்றியவர்கள் உடனடியாக வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.முதற்கட்ட விசாரணையில், சமையல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து தீப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

Advertisement
தீயணைப்புத் துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அங்காடியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு