Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 20 செப்டம்பர் 2026 | 4 புரட்டாசி பராபவ வருடம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது: 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு ...

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது: 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு ...

சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் (Boiler) குழாய் பழுதால், மொத்தம் 810 மெகாவாட் மின்சார உற்பத்தி தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.தகவலின்படி, 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முதல் பிரிவில் உள்ள 210 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அந்த அலகின் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 1,440 மெகாவாட் மொத்த உற்பத்தித் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement
பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தவுடன், பாதிக்கப்பட்ட அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின் விநியோகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மாற்று மின் ஆதாரங்கள் மூலம் தேவையை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு