Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

திரைப்படம் ஒன்றுக்காக பெற்ற முன்பணத்தில் ரூ.40 லட்சத்தை திருப்பி வழங்கவில்லை என்ற புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நடிகர் ராஜ்கிரண் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டுள்ள ராஜ்கிரண், குறிப்பாக கிராமிய பின்னணி கொண்ட திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர். சமூக அக்கறை கொண்ட கருத்துகளையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். சென்னை மீஞ்சூரைச் சேர்ந்த சரவணன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், படப்பிடிப்பு பணிகள் தொடங்காத நிலையில், தான் வழங்கிய பணத்தை திருப்பித் தருமாறு சரவணன் ராஜ்கிரணிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 2025-ம் ஆண்டு சரவணனுக்கு ரூ.10 லட்சம் திருப்பி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.40 லட்சத்தை திருப்பி வழங்கவில்லை என்றும், அந்த தொகை மோசடி செய்யப்பட்டதாகவும் கூறி, கடந்த 2025 செப்டம்பர் மாதம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்.

Advertisement

இதையடுத்து, பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ராஜ்கிரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் வழங்கக் கோரி தற்போது ராஜ்கிரண் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது உரிமையியல் சார்ந்த விவகாரம் என்ற நிலையில், அதற்கு குற்றவியல் தன்மை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான தாம் எங்கும் தப்பிச் செல்லப் போவதில்லை என்றும் ராஜ்கிரண் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு