Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

ரவி மோகனின் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

ரவி மோகனின் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், ‘ஜெயம்’, ‘தனி ஒருவன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். ‘பராசக்தி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி தனது நடிப்பால் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். தற்போது ‘கராத்தே பாபு’, ‘பென்ஸ்’, ‘ப்ரோ கோட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரவி மோகன், தனது நீண்டகால கனவை நிறைவேற்றும் வகையில் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இதில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை இயக்குவதுடன், ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்க உள்ளதாக ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மேற்கத்திய இசை பாணியில் பாடல்களை பாடி கவனம் பெற்ற கெனிஷா, இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில், ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் முதல் பாடலான ‘ஹையர்’ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான புரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாடல் வரும் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி மோகன் மற்றும் யங் ராஜா இணைந்து எழுதியுள்ள ‘ஹையர்’ பாடலுக்கு கெனிஷா இசையமைத்துள்ளார். கெனிஷாவின் இசையமைப்பாளர் அறிமுகம் என்பதால், இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு