Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 27 அக்டோபர் 2026 | 10 ஐப்பசி பராபவ வருடம்

“பேமிலி பாய்” படத்தின் டீசர் வெளியீடு

“பேமிலி பாய்” படத்தின் டீசர் வெளியீடு

நடிகரும் இயக்குநருமான மிதுன் மாணிக்கம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மிதுன் மாணிக்கம். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய படத்துக்கு ‘பேமிலி பாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அவரே இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுக்கிரகா எஸ். நம்பியார், நிகிலா ஷங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.பி. நிர்மல் இசையமைத்துள்ளார். குடும்பத்துடன் ரசித்துப் பார்க்கும் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘பேமிலி பாய்’ படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் டிசம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
“சிலப்பதிகாரத்துல தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்…” என்ற வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு நடுத்தரக் குடும்பம் ஒன்றில் உண்மையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தை மையமாகக் கொண்டு, இப்படத்தின் திரைக்கதை சஸ்பென்ஸ் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. தங்களுக்குப் பிரியமான ஒரு முக்கியப் பொருள் காணாமல் போனதைத் தொடர்ந்து, அதைக் கண்டுபிடிக்க கதாநாயகன் மேற்கொள்ளும் ஒருநாள் பயணமே கதையின் மையமாக உள்ளது. இந்தத் தேடலின்போது அவர் சந்திக்கும் சுவாரசியமான நிகழ்வுகளும், எதிர்பாராத ஆபத்துகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் டீசரில் இடம்பெற்றுள்ளன. இழப்பு, வீழ்ச்சி, போராட்டம் எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வெற்றிபெறும் ஒருவனின் பயணத்தையும் இப்படம் வெளிப்படுத்தும் என டீசர் உணர்த்துகிறது. டிசம்பர் 11-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு