நேபாள வெள்ளம்: காணாமல் போனவர்களை அடையாளம் காண தமிழக அரசு சார்பில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஏற்பாடு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காணும் வகையில், அவர்களின் முதல்நிலை உறவினர்களுக்கு இலவசமாக டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள தடய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கினர். அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் இணைந்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலத்துறை ஆணையரகத்திலும், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலும் உதவி மையங்கள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டன. செப்டம்பர் 2-ம் தேதி நிலவரப்படி, நேபாளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 305 பேரில் 220 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரைத் தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, நேபாள அரசு மற்றும் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், நேபாள அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் முதல்நிலை உறவினர்களில் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து டி.என்.ஏ.