Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

பி.கே. மூக்கையாத் தேவரின் 47-வது நினைவு நாள்: உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் அஞ்சலி..!

பி.கே. மூக்கையாத் தேவரின் 47-வது நினைவு நாள்: உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் அஞ்சலி..!

பி.கே. மூக்கையாத் தேவரின் 47-வது நினைவு நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட உள்ளது.இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் மற்றும் பொதுச்சேவையில்தீவிரமாகசெயல்பட்டவரும்,நாடாளுமன்றம்மற்றும் சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றியவருமான பி.கே. மூக்கையாத் தேவர், கல்விப் பணிகளிலும் அதிக அக்கறை கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.அவரது 47-வது நினைவு நாளான செப்டம்பர் 6, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அதிமுக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் மேற்கொள்கிறார்.மூக்கையாத் தேவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு மற்றும் தேனி மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அளவிலான சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும், மாவட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், தற்போதைய மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் அதிமுக தொண்டர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு