தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிரடி உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று திடீரென விலை உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதன் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-ஆகவும், கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950-ஆகவும் இருந்தது.இந்த நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது.