Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ – ராமதாஸ் இல்லத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை!

‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ – ராமதாஸ் இல்லத்தில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை!

பாமக நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் இல்லத்தில், அவரை சந்திக்க வருபவர்கள் அரசியல் குறித்து பேச வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ள இந்தப் பலகையில், ‘அரசியல் துறவறம்’என்ற தலைப்பின் கீழ் பல்வேறு அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், அன்றுமுதல் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். மேலும், அரசியல் குறித்து பேசவோ, அதற்கு வழிகாட்டவோ மாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார்.இந்நிலையில், அவரை சந்திக்க வருபவர்களில் சிலர் அரசியல் தொடர்பான விஷயங்களை பேச முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
இதனால், இல்லத்தின் நுழைவு வாயில் பகுதியில் தற்போது அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில், தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமதாசை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், சந்திக்க வரும் பார்வையாளர்கள் “தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு