Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி பெட்டகம்; ரூ.58 லட்சம் பணம் கொள்ளை – 29 பேர் கைது

நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி பெட்டகம்; ரூ.58 லட்சம் பணம் கொள்ளை – 29 பேர் கைது

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் வங்கிப் பெட்டகம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரசுவா மாவட்டத்தில் உள்ள போடோகோசி ஆற்றுப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட அந்த வங்கிப் பெட்டகம், பல கிலோமீட்டர் தொலைவில் தாடிங் மாவட்டத்தில் திரிசூலி ஆற்றின் கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.பெட்டகத்தை கண்டெடுத்த சிலர், அதை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 29 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 92.68 லட்சம் நேபாள ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.57 லட்சம் என கூறப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களின் வயது 19 முதல் 49 வரை இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தாடிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் எந்த வங்கிக்கு சொந்தமானது, இந்தச் சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த தங்கக் காதணியை திருடியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் உடலில் இருந்து நகையை அகற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு