Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

புலியை துரத்திச் சென்று வீழ்த்திய டிரம்ப்! வைரலாகும் ஏ.ஐ. வீடியோ

புலியை துரத்திச் சென்று வீழ்த்திய டிரம்ப்! வைரலாகும் ஏ.ஐ. வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புலியை துரத்திச் சென்று அதைத் தரையில் வீழ்த்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு முன்னதாக, இளைஞர் ஒருவரை புலி தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் டிரம்ப் வெளியிட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான தகவல்களின்படி, இங்கிலாந்தின் டான்காஸ்டர் பகுதியில் அமைந்துள்ள யார்க்ஷயர் வனவிலங்கு பூங்காவில் புலி அடைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் ஒருவர் குதித்துள்ளார். அப்போது புலி அவரைக் கடித்துத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தின் உண்மையான காட்சிகளை டிரம்ப் பகிரவில்லை. மாறாக, இயற்கையுடன் மோத வேண்டாம் என்ற கருத்தைத் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement
இதைத்தொடர்ந்து, புலியுடன் டிரம்ப் விளையாடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். புலியின் தாக்குதலை எதிர்கொள்ளும் நபர், அச்சத்துடன் கையை நீட்டி எச்சரிப்பதும், சத்தமிட்டு பேசுவதும் போன்ற செயல்களை டிரம்ப் செய்வதாக அந்த வீடியோவில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. புலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், இத்தகைய வீடியோவை டிரம்ப் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினர் துயரத்தில் இருக்கும் நிலையில், இதுபோன்ற வீடியோவைப் பகிர்வது பொருத்தமற்றது என சிலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு