Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

#நாகர்கோவில்–கோவை சூப்பர்பாஸ்ட் ரெயிலில் கூடுதல் ஸ்லீப்பர் பெட்டி

#நாகர்கோவில்–கோவை சூப்பர்பாஸ்ட் ரெயிலில் கூடுதல் ஸ்லீப்பர் பெட்டி
பயணிகளின் அதிகரித்துள்ள தேவையை முன்னிட்டு, நாகர்கோவில்–கோவை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தற்காலிகமாக கூடுதல் ஸ்லீப்பர் (தூங்கும் வசதி) பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.இந்த கூடுதல் பெட்டி இணைக்கப்படுவதன் மூலம், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுமார் 72 பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட பயண வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்ட தகவலின்படி, நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜூலை 17 முதல் ஜூலை 30 வரை கூடுதல் ஸ்லீப்பர் முன்பதிவு பெட்டி இணைக்கப்படும்.அதேபோல், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதே ரெயிலிலும் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை இந்த சிறப்பு ஏற்பாடு அமலில் இருக்கும்.பயண நெரிசலை குறைத்து, அதிகமானோருக்கு வசதியான பயணத்தை வழங்கும் நோக்கில் இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு