Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

நம்பி வாக்களித்த பெண்களுக்கு பாதுகாப்பில்லை - தவெகவை விமர்சித்த மேயர் பிரியா

நம்பி வாக்களித்த பெண்களுக்கு பாதுகாப்பில்லை - தவெகவை விமர்சித்த மேயர் பிரியா

தவெகவை நம்பி வாக்களித்த பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என சென்னை மேயர் பிரியா விமர்சித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்.பி. அப்துல்லா, சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, தவெக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது, முதல்-அமைச்சராக வருவேன் என்றும், மக்களுக்கு துணையாக இருப்பேன் என்றும் கூறி வாக்குகளைப் பெற்ற நிலையில், தற்போது 7 மற்றும் 8 வயது சிறுமிகள் கூட பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement
மேலும், சினிமாவில் வருவது போன்று நடவடிக்கை எடுப்போம் என்று கூறி நம்பிக்கை ஏற்படுத்தி வாக்களிக்கச் செய்த மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலை இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். தவெக சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தனா மற்றொரு நிகழ்ச்சியில், ரீல்ஸ் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட்டோம் எனக் கூறியதாகவும் மேயர் பிரியா குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அவர், திமுகவுக்கு ரீல்ஸ் மூலம் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், தங்களுக்கு தலைவர், அக்கா, சின்னவர் என தலைமை இருப்பதுடன், கொள்கையும் இருப்பதாகவும் விமர்சித்துப் பேசினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு