Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 08 அக்டோபர் 2026 | 22 புரட்டாசி பராபவ வருடம்

டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வடபழனியில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை அமைச்சர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நேற்று வரை 21,655 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழை தொடங்க உள்ள நிலையில், டெங்கு தடுப்பு பணிகளில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். வீடுகளின் மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Advertisement
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்று வரும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வரும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு